loading

Tag: திதி

  • Home
  • Tag: திதி

திதியை வைத்து விதியை வெல்லலாம்

திதிகள் 14. பிரதமை முதல் சதுர்த்தசி வரை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகும். ஒவ்வொரு தித்திக்கும் இரண்டு ராசிகள் சூனியம் அடையும். உதாரணமாக துவாதசி திதியில் ஒருவர் பிறந்து இருந்தால் துலாம் மற்றும் மகரம் ராசிகள் சூனிய ராசிகள் ஆகும். இதேபோல் ஒவொரு தித்திக்கும் இரண்டு ராசிகள் சூனியம் அடையும். இதை கருத்தில் கொண்டு ஜாதகத்தில் உள்ள தடைகள் ஏன்ஏற்படுகிறது என்பதைகண்டறியலாம் .

உதாரணமாக ஒரு பெண் விருச்சிக லக்கினத்தில் பிறந்து இருந்தால் 7மிடம் ரிஷப ராசியாக வரும். அந்த ரிஷா ராசியி அதிபதி சுக்கிரன் . அந்த சுக்கிரன் மேலே கூறிய சதுர்திதியில் பிறந்த ஜாதகருக்கு மகரத்தில் திதி சூனிய ராசியில் இருந்தால் திருமணம் கால தாமதம் ஆகும்

பெண் ஜாதகத்தில் 9மிடத்திம் திதி சூனியமாஹா இருந்தாலோ அல்லது 9மிடத்தில் திதி சூனிய கிரஹாம் இருந்தாலோ புத்திர பாக்கியம் தடை படும்.. ஆண் ஜாதகத்தில் 5மிடம் திதி சூனிய ராசியாகவோ அல்லது 5மிடத்தில் திதி சூனிய கிரஹாம் இருந்தாலோ புத்திர பாக்கியம் தடை படும். இதை விடுத்து 5மிடத்தில் ராகு உள்ளது அதனால் புத்திர பெரு இல்லை அந்த தீர்மானித்து ராகுவுக்கு உரிய பரிகாரங்களை செய்வதால் எந்த பலனும் இல்லை.10மிடம் தொழில் ஸ்தானம், கர்மா ஸ்தானம் மட்டுமில்லை அந்த 10மிடம் என்பது 7மிடத்துக்கு 4மிடம். 4மிடம் என்பது வண்டி வாஹனம் மற்றும் வீடு ,கல்வி என்று மட்டும் இல்லாமல் 4மிடம் என்பது நிம்மதி சந்தோசம் குறிக்கும் ஸ்தானமாகும். ஆக 10மிடம் திதி சூனியமாக வந்தாலோ அல்லது 10மிட்த்தில் ஒரு திதி சூனிய கிரஹம் இருந்தாலோ அந்த பெண்ணுக்கு திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்காது .